அதிக அளவில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும் ' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, அதிக அளவில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும் ' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகள் , உதவி பெறும் பள்ளிகள் , உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப , அதிக அளவில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும் ' என , தமிழக அரசுக்கு , சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் , கீழப்பாவூரைச் சேர்ந்த , எம் . சித்ரா என்பவர் , தாக்கல் செய்த மனு : கீழப்பாவூர் அருகில் உள்ள மடத்துாரில் , இந்து நடுநிலைப் பள்ளி உள்ளது . இது , அரசு உதவி பெறும் பள்ளி . கடந்த , 2012 ஏப்ரலில் , ஆசிரியராக நியமிக்கப்பட்டு , பணியாற்றி வருகிறேன் . ஆசிரியர் தகுதி தேர்வில் நான் தேர்ச்சி பெறாததால் , என் நியமனத்துக்கு , அரசு ஒப்புதல் அளிக்கவில்லை . எனவே , சம்பளம் இல்லாமல் பணியாற்றி வருகிறேன் . 

இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி , ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் , 2010, ஆகஸ்ட் 23 ம் தேதிக்குப் பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் , தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என , தொடக்க கல்வி துறை உத்தரவிட்டது . ஆசிரியர் நியமனத்துக்கு , குறைந்தபட்ச தகுதியாக , தகுதி தேர்வு தேர்ச்சி என , ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு , நிர்ணயித்துள்ளது . கட்டாய கல்வி சட்டம் அமலுக்கு வந்து , 5 ஆண்டுகளுக்குள் , இந்த தகுதியை பெற வேண்டும் . எனவே , 5 ஆண்டுகளுக்குள் , ஆசிரியர் தகுதி தேர்வில் , நான் தேர்ச்சி பெற வேண்டும் . அப்போது தான் , என் நியமனத்துக்கு , அரசு ஒப்புதல் வழங்கும் . ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் , என் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் . இவ்வாறு , மனுவில் கூறப்பட்டுள்ளது . இதேபோன்று , திண்டிவனத்தில் , எம் . டி . கிரேன் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் நாகராஜன் என்பவரும் , பணி நியமனத்துக்கு ஒப்புதல் கோரி , மனுத் தாக்கல் செய்தார் . இம்மனுக்களை விசாரித்த , நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு : ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து , அந்த காலியிடத்தில் , மனுதாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . அவர்களுக்கு , கல்வி தகுதி உள்ளது ; ஆனால் , ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை . அதனால் , அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை . சம்பளமும் வழங்கப்படவில்லை . 

கடந்த ஆண்டு , ஏப்ரலில் , விரிவான உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தேன் . அரசு உதவி பெறும் பள்ளிகளில் , இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ( ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ), ஐந்து ஆண்டுகளுக்கு , தற்காலிக ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் , ஐந்து ஆண்டுகளுக்குள் , அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது . ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அப்போது இல்லாததாலும் , தகுதி பெற்றவர்கள் , அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டதாலும் , அதை கவனத்தில் கொண்டு , அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . கடந்த ஆண்டு , ஏப்ரலில் , இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின் , ஒருமுறை தான் , தகுதி தேர்வு நடந்திருப்பதாக , தெரிவிக்கப்பட்டது . ஆனால் , அரசு பள்ளிகள் , உதவி பெறும் பள்ளிகள் , உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் , ஆசிரியர்கள் தேவை அதிகம் உள்ளது . எனவே , எவ்வளவு எண்ணிக்கையில் தகுதி தேர்வு நடத்த வேண்டுமோ , அந்த அளவுக்கு நடத்த வேண்டும் . தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லாத போது , தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை , உதவி பெறும் பள்ளிகளில் நியமிப்பதை தவிர , வேறு வழியில்லை . ஆறு வாரங்களுக்குள் , மனுதாரர்களுக்கு , தற்காலிக ஒப்புதல் வழங்க , தொடக்க கல்வி இயக்குனருக்கு உத்தரவிடப்படுகிறது . பணியில் நியமிக்கப்பட்ட தேதியில் இருந்து , ஐந்து ஆண்டுகளுக்குள் , தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் . இல்லையென்றால் , வேலையை விட்டு தானாக போய் விடுவர். அரசு பள்ளிகள் , உதவி பெறும் பள்ளிகள் , உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் உள்ள , காலியிடங்களை நிரப்ப ஏதுவாக , ஒரு ஆண்டில் , எந்த எண்ணிக்கையில் தகுதி தேர்வு நடத்த முடியுமோ , அந்த அளவுக்கு நடத்த வேண்டும் என , தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு , நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார் .